பெண்ணிய நோக்கில் சங்கதி

Main Article Content

கி.நவீன்குமார்

Abstract

இந்த ஆய்வுக் கட்டுரை தலித் பெண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையில் பாமாவின் சங்கதி நாவலை ஆராய்கிறது. பெண்ணியம் என்பது ஆண்–பெண் சமத்துவத்தை முன்வைக்கும் சிந்தனையாக இருந்தாலும், தலித் பெண்களின் வாழ்வியல் அனுபவங்கள் பொதுப் பெண்ணியத்திலிருந்து வேறுபட்டவை என்பதை சங்கதி நாவல் தெளிவாக எடுத்துரைக்கிறது. சாதி, பாலினம், பொருளாதார, வறுமை மற்றும் சமூக அதிகார அமைப்புகள் இணைந்து தலித் பெண்களை எவ்வாறு ஒடுக்குகின்றன என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. பாலியல் வன்முறை, கட்டாயத் திருமணம், மனைவி மீதான வன்முறை, மன ஒடுக்குமுறை, உடை முறைகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆபாச மொழி பயன்பாடு போன்ற வாழ்வியல் கூறுகள் பெண்ணியப் பார்வையில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. தலித் பெண்களின் வலி, எதிர்ப்பு மற்றும் உயிர்ப்புடன் கூடிய குரலைப் பதிவு செய்வதன் மூலம் பாமா தலித் பெண்ணியத்திற்கு ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்குகிறார் என்பதே இவ்வாய்வின் மையக் கருத்தாகும்.

Article Details

Section

Articles