நெய்ல திணையில கட்ணைக்ப்ட்ு் விணளயாட்ுள
Main Article Content
Abstract
மக்களின் வாழ்க்கைக் கூறுகளுள் ஒன்றாக விளையாட்டுத் திகழ்கின்றது. மனிதன் தன் உடல்நிலை, மனநிலை ஆகிய இரண்டினையும் சீராக வைத்துக் கொள்ள விளையாட்டுக்கள் பயன்படுகின்றன. சிறுவர் முதல் முதியவர் வரை அனைத்து மக்களும் விளையாடும் வகையில் விளையாட்டுக்கள் உள்ளன. விளையாட்டு ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்குகிறது. உடற்திறனை அதிகரிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. உடல்பருமனாகும் அபாயத்தைக் குறைக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புத்துணர்ச்சி கிடைக்கின்றது. தலைமைப்பண்பு வளர்கிறது. உடலினை உறுதிசெய்கின்றது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் விளையாடுவதினால் கிடைக்கின்றது. நெய்தல் நில மக்கள் திணை சார்ந்தும் பொழுதுபோக்கிற்காகவும் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடியுள்ளனர் என்பதனை சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது. சங்க இலக்கிய நெய்தல் திணையில் மறைத்தாடல், தாயம், அலவன் ஆட்டம், சிற்றில் இழைத்தல், சிற்றில் சிதைத்தல், வண்டற்பாவை, நீராடல், ஓரையாடுதல், கானலாடல், எண்ணிவிளையாடல், ஊசல் ஆடல், ஆகிய விளையாட்டுகள் பயின்று வந்துள்ளமையை அறியமுடிகின்றது. நெய்தல் நில மக்கள் அஃறிணை உயிரினையும் தன் உடன் பிறந்ததாகக் கொள்ளும் உயரிய குணம் படைத்தவர்கள் என்பதனை அறியமுடிகின்றது. நெய்தல் நில மக்களிடம் ‘தாயம்’ என்னும் விளையாட்டினை விளையாடும் வழக்கம் இருந்ததனையும் தாயம் என்பதற்கு ‘ஆயம்’ என்ற பெயர் சங்க இலக்கியத்தில் சுட்டப்பட்டுள்ளதையும் அறியமுடிகின்றது. நெய்தல் நில மக்களின் விளையாட்டுகளில் முதன்மை இடத்தை அவலன் ஆட்டல் என்னும் விளையாட்டு பிடித்துள்ளதையும் இவ்விளையாட்டை பெரும்பாலும் பெண்கள் விளையாடியுள்ளனர் என்பதும் புலனாகின்றது. சிற்றில் இழைத்தல் என்னும் சிறுவீடு கட்டி விளையாடும் விளையாட்டு நெய்தல் நில மக்களிடம் காணப்பட்டதனையும் இன்று குழந்தைகள் வினையாடும் விளையாட்டாக இருக்கும் இவ்விளையாட்டு சங்க காலத்தில் இளம் பெண்கள் விளையாடும் விளையாட்டாக இருந்தனையும் உணரமுடிகின்றது. நெய்தல் நில மகளிர் மண்ணால் செய்யப்பட்ட பாவையை வைத்து விளையாடியுள்ளனர் என்பதனையும் அப்பாவையைத் தன் குழந்தை போல பாவித்து பாதுகாக்கின்றனர் என்பதனையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
Article Details
Section

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.