நடப்பியலில் வண்ணம்
Main Article Content
Abstract
அகத்தியத்தின் வழித்தொல்காப்பியரால் உருவாக்கப்பட்டது தொல்காப்பியம். இஃது இலக்கண நூல்களுள் முதன்மை வாய்ந்தது. அதில் இடம்பெறும் இலக்கணச்சுவை சொல்லவொண்ணாத் தொன்மை வாய்ந்தது. அகத்தியரின் மாணாக்கர்களில் தலைசிறந்த மாணாக்கன் தொல்காப்பியர் ஆவார். காப்பியக் குடியில் பிறந்த இவரின் சிறந் தபடைப்பு தமிழின் சிறந்த இலக்கணநூலான தொல்காப்பியம் ஆகும். இதனை மூலநூலாகக் கொண்டு பின்னாளில் நன்னூல் போன்ற வழிநூல்கள் தோன்றியுள்ளன. அத்தகைய பெருமைவாய்ந்த அவ்விலக்கணச் சமுத்திரத்தில் மூழ்கி; வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து; அதனைச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான பிள்ளைத்தமிழில் நடப்பியல் அணுகுமுறையில் பொருத்திப் பார்க்கும் முறையே இவண் மேற்கொள்ளப்படுகிறது. தமிழியல்துறையில் காலந்தோறும் ஆய்வுகள் வளர்ந்துகொண்டே உள்ளன. ஓர் இலக்கியவகையில் இலக்கணத்தைப் பொருத்திப் பார்க்கும் முறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது
Article Details
Section

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.